ஜெ
உச்சகட்டங்களில் மனிதர்கள் ஒன்று அறம் நழுவி சாதாரணர்கள் ஆக மாறிவிடுகிறார்கள். அதைத்தான் களத்தில் தொடர்ச்சியாக வெண்முரசு காட்டியது. அர்ஜுனன் மட்டுமல்ல யுதிஷ்டிரரும் இளைய யாதவருமேகூட வழுவினார்கள். ஆனால் கர்ணன் வழுவவில்லை. ஆகவே ஒளியடைந்தான்
ஆனால் அவன் சிதையிலேறும் இடத்தில் ஒரு அந்தணர் அந்த நெருக்கடிகளின் உச்சத்தில் மேலும் மேலும் தன் அறத்தைக் கண்டடைந்து அதில் அமர்ந்தபடியே செல்கிறார். மொத்தக் குருஷேத்திரத்திர்கும் அவர் மாறாக நின்றிருக்கிறார்
நெறிகளைப் பேணுவது. மானுடநெறிகளை கூறுவது. அவற்றைக் கடந்தமையும் தெய்வநெறிகளை கண்டுகொள்வது. என் குலப்பணியை நிறைவேற்றுகையில் உங்களை அல்ல எந்த அரசரையேனும் ஒரு பொருட்டென நான் எண்ணுவேன் என நினைக்கிறீர்களா? நீங்கள் என்னை கழுவேற்றினாலும் அதன் மேல் தர்ப்பையில் என என்னால் அமர்ந்திருக்க இயலும்”
என்று சுப்ரதர் சொல்லும் இடம் என்னை மெய்சிலிர்ப்படையச் செய்தது. குருஷேத்திரம் அறநிலம் என்பது இதனால்தான் என்று தொன்றிவிட்டது. இவர் அந்த நிலத்தில் எழுந்த அக்னி
ராம்சந்தர்