அன்புள்ள ஜெ
விருஷாலி சிதையேறுமிடத்தில் சுப்ரதர் அடையும் மாற்றம் முக்கியமானது.
ஆரம்பம் முதலே காட்டப்படுவது அதுதான். அவர் ஒரு அந்தணர். பெரிய கல்வி இல்லாதவர். ஆகவே
சிதைவேலை செய்கிறார். ஆனால் அந்தணர் என்பதனாலேயே அவர் மெல்லமெல்ல தன் குடிக்குரிய சிறந்த
இயல்பை அடைகிறார். அந்தணன் நீரையும் பின்னர் குருதியையும் இறுதியாகக் கண்ணீரையும் கொண்டு
உண்மையை அறியவேண்டும் என்கிறார். ஆகவே அவர் விருஷாலியின் கண்ணீரை அறிந்துகொள்கிறார்.
சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றில் தொடங்குகிறார். ஆனால் மெல்லமெல்ல மானுட உண்மையை உணர்ந்து
அதன் பக்கம் நிலைகொள்கிறார். அந்த மாறுதல் ஒரு வகையான உச்சமாக வெளிப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே
அந்தக்கதாபாத்திரம் அப்படி வளர்ந்து வந்துகொண்டிருந்தது
பாஸ்கர்