ஜெ,
நீங்கள் முன்னர் ஒருவர் கேட்ட கேள்விக்கு குருக்ஷேத்திரம் எங்கு உள்ளது என்று சொல்ல இயலாது என்று சொல்லியிருந்தீர்கள்.
நான் இன்று டெல்லிக்கு அருகே குருகிராமில் இருக்கிறேன். வெண்முரசு படித்தபின் வருவதால் இந்த நிலத்தின் உணர்வே கிளர்ச்சியாக உள்ளது !
அன்புடன்
மது
குருக்ஷேத்திரம் இன்றும் உள்ளது. டெல்லியிலிருந்து 50 கிமீ தொலைவில். அது எப்போதுமே அப்படி கருதப்பட்டு வருகிறது. ஏனென்றால் அங்கே நீத்தார் சடங்குசெய்கிறார்கள். அது எந்த ஆண்டும் நின்றதில்லை. ஆகவே ஏறத்தாழ அதுதான் குருஷேத்திரம்
ஆனால் மகாபாரதம் குருஷேத்திரம் என சொல்லும் நிலம் மிகமிகப்பெரியதாக உள்ளது. அதன் எல்லையில் பல ஆறுகள் சொல்லப்படுகின்றன. ஆகவே அதை நம்மால் இன்று தெளிவாக சொல்லிவிடமுடியாது. தோராயமாக டெல்லியில் இருந்து நூறுகீமீ தொலைவில் என வகுத்துக்கொள்லலாம்
ஜெ