அன்புள்ள ஜெ
இருட்கனியின் போர்க்களக் காட்சிகள் நடுவே அவ்வப்போது பழைய நினைவுகள் எழுகின்றன. ஒவ்வொருவரும் தங்களை புதிதாகக் கண்டுகொள்கிறார்கள். துச்சாதனன் விளையாட்டுக்குழந்தையாக இந்நாவலுக்குள் வருகிறான். சுபாகு இளம் அறிஞனாக. துரியோதனாதியர் அன்பான சகோதரக்கூட்டமாக வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வெய்யோன் நாவலில்தான் விரிவாக வந்தனர். அதன்பின் அவர்கள் சொல்லப்படவே இல்லை. இந்த அழிவின்போது அவர்களை அப்படி உர்சாகமான இளைஞர்களாகவும் அன்பான சகோதரர்களாகவும் பார்ப்பது மனதை நெகிழச்செய்வதாக இருந்தது.
ஆனால் கர்ணனின் இளமைப்பருவம் ஒரு வரிகூட வரவில்லை. அழகான தருணங்களே சொல்லப்படவில்லை. முன்னர் சில தருணங்கள் வந்துள்ளன. இப்போது அவருடைய வாழ்க்கை முழுக்கமுழுக்க இருண்ட ஒளியிலேயே காட்டப்பட்டுள்ளது
சிவா