செந்நாவேங்கை முதல் போர்க்களக்காட்சிகள் மெல்லமெல்ல
உருவாகி வருவதை இப்போது ஒட்டுமொத்தமாக வாசிக்கிறேன். செந்நாவேங்கையில் எதற்காக இந்தப்போர்க்களத்தை
இந்த அளவுக்கு விவரிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அணுவணுவாக, துளித்துளியாக குருஷேத்திரம்
உருவாகி வந்தது காட்டப்பட்டது. எப்படி குடில்கள் அமைக்கப்பட்டன. எப்படி கொட்டகைகள்
போடப்பட்டன. எப்படி பாதைகள் அமைக்கப்பட்டன. மருத்துவநிலைகள், கொல்லன் உலைகள், சிதைகள்
எல்லாமே துல்லியமாகக் காட்டப்பட்டன. இன்று தான் அது ஏன் என்று புரிகிறது. இப்போது துளித்துளியாக
அப்படியே அவை ஒட்டுமொத்தமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றாக அழிகின்றன. எப்படி ஒன்றாகத்திரண்டதோ
அப்படியே அழிகிறது. குழந்தை வளர்ந்து இளமையை அடைந்து முதுமையை அடைந்து செத்துவிடுவதுபோல
தோன்றுகிறது. அந்த நிதானமான திரண்டுவரும் காட்சியும் இப்போது நிதானமாக அழிந்துபோகும்
காட்சியும் ஒரு பெரிய காவியத்தன்மையுடன் உள்ளன
ஜெயராமன்