Monday, June 24, 2019

காவியம்




அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் செந்நாவேங்கை முதல் குருஷேத்திரம் மிக நிதானமாக ஒருங்குகூடுவதை பற்றிச் சொல்லியிருந்தார். இந்த அளவுக்கு டீடெயில் எதற்கு என்ற கேள்வியை என் நண்பர்கள் பலரும் கேட்டுக்கொள்வது உண்டு. உண்மையில் எபிக் என்பதே டீடெயில்தான். ஆகவே எந்த எபிக்கும் மிகமிக மெல்லத்தான் செல்லும். எபிக் வாசிப்புக்கு அவசியமானது பொறுமைதான். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பார்ப்பதற்காகவே நாம் எபிக்கை வாசிக்கிறோம். முழுமையான பார்வைக்கு அவசியமானது பொறுமையான சீரான அணுகுமுறை. இது ஏதாவது ஒரு காவியத்தை வாசித்தால் புரியும்.

பொதுவாக நவீனநாவல்கள் வணிகநாவல்கள் மட்டுமே வாசித்தவர்களுக்கு இந்த வகையான பொறுமை இருப்பதில்லை. அவர்கள் எல்லாம் சுருக்கமாகவும் வேகமாகவும் சொல்லப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சுருக்கம் என்பது ஏன் எபிக்கில் சாத்தியமில்லை? சுருக்கமாகச் சொல்லப்படும் கதைகள் எல்லாம் நாம் அறிந்த சூழலில் நிகழ்பவை. மௌண்ட்ரோட்டில் ஒரு விஷயம் நடைபெறுகிறது என்றால் மௌண்ட்ரோட்டில் எந்த இடம் என்று சொன்னால் மட்டும் போதும். ஆனால் குருக்ஷேத்திரத்தை குருக்ஷேத்திரம் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதாது. நுணுக்கமாகக் கண்ணில் காட்டியாகவேண்டும். அதைத்தான் வெண்முரசிலே காண்கிறோம்

சாரங்கன்