ஜெ
வெண்முரசு தொடங்கும்போது எனக்கு அரசமுறைமைகள், வாழ்த்தொலிகள்,
மங்கலச்செயல்பாடுகள் எல்லாம் பெரிய ஆர்வத்தை அளித்தன. அதன்பின் திரும்பத்திரும்ப வந்துகொண்டே
இருக்கின்றன என்ற சலிப்பு ஏற்பட்டது. நீங்களும் ஒவ்வொருமுறையும் அதை எழுதச் சலிப்பதில்லை.
ஒருமுறை நேரில் கேட்டேன். நம் கோயில்களிலுள்ள அலங்காரச்செதுக்குகள் போன்றுதான் அவை
என்று சொன்னீர்கள். அவை திரும்பத்திரும்ப வந்துகொண்டுதான் இருக்கும் என்று சொன்னீர்கள்.
அது எனக்கு ஏற்புடையதாகவும் இருந்தது. ஆனால் இப்போது போரில் எல்லா முறைமைகளும் அழிந்து
எல்லா மங்கலங்களும் அழிந்து எல்லாமே சிதைந்து கிடப்பதைப் பார்க்கையில் அதெல்லாம் பெரிய
கனவுபோல தோன்றுகிறது. இந்த அழிவை இவ்வளவு ஊன்றிக்காட்டுவதற்காகத்தான் நீங்கள் அந்த
மங்கலங்களை அவ்வளவு ஊன்றிக்காட்டினீர்கள் என்று புரிகிறது
ஆர்.எஸ்.கணேஷ்