Sunday, August 11, 2019

குகைச்சித்திரங்கள்




அன்புள்ள ஜெ,

வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் குகைச்சித்திரங்கள் முக்கியமானவை. முதற்கனல் தொடங்கி ஆழமான நீர்நிலைகள், குகைகள் இரண்டும் இரண்டுவகையான முக்கியமான மெட்டஃபர்களாக வந்துகொண்டே இருக்கின்றன. பகன் கதையில் அந்தக் குகை ஓவியங்கள் மிகக்கூர்மையான படிமங்களாக ஆகிவிட்டிருக்கின்றன. இரண்டுமே இரண்டுவகையான காலத்துளைகள். இரண்டிலும் சென்றவர்கள் எங்கோ செல்கிறார்கள். குகைகள் பெரும்பாலும் நாம் அறியாத ஒரு கடந்த காலத்திற்கு அல்லது மறைந்த யுகத்திற்குச் செல்வனவாகவே சொல்லப்பட்டுள்ளன.

இப்போது துரியோதனன் செல்லும் குகைகளின் சித்திரம். இது இன்னும் சற்று வேறுபாட்டுடன் முன்பு வந்திருக்கிறது. அசுரர்கள் இந்தக்குகைகளுக்குள் இருந்து எழுகிறார்கள். திரும்பிச் செல்கிறார்கள். அர்ஜுனைன் பிறப்பை ஒட்டியும் பர்ஜன்ய பதத்தில் இப்படி ஒரு குகை உள்ளது. குகைச்சித்திரங்களை ஆழ்மனதில் உள்ளவை என்ற ஆர்க்கிடைப் ஆக மாற்றிவிடுகிறீர்கள் என நினைக்கிறேன்

இந்த குகைச்சித்திரங்களை எல்லாம் எடுத்து ஒன்றாக்கி வெண்முரசு அளிக்கும் அந்தக் காலச்சித்திரத்தை ஒட்டுமொத்தமாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

மகாதேவன்