Wednesday, December 10, 2014

காணாப்போர்



ஜெ

வெண்முரசில் போர்க்களக்காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. பீஷ்மர் அம்பையை தூக்கிவரப்போகும் இடத்தில் உள்ள போர்தான் முதல்போர். அதன்பிறகு பல போர்கள். இதுவரை வந்ததிலேயே பெரிய போர் துருபதன் போர்தான்

ஆனால் காட்டப்படாத ஒரு போர்தான் மனசிலே அழுத்தமாக நிற்கிறது. அது கிருஷ்ணனும் அர்ஜுனனும் மதுராவைக் கைப்பற்றும் போர். போரை எப்படிச் செய்வது என்ற வர்ணனையும் விரிவான திட்டமும் உள்ளது. அதன்பிறகு போருக்கு முன்பு உள்ள மனநிலைகள். பிறகு போர் நடந்ததைப்பற்றிய பேச்சுக்கள். போர் நேரடியாக காட்டப்படவில்லை.

ஆனால் காட்டப்படாத அந்தப்போர்தான் மனதை பெரிதாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது. எரியும் மதுரைக்கோட்டை. அதைச்சுற்றி வரும் படைகள். தீயிலேயே புகுந்து தாக்கும் கிருஷ்ணனின் படை. எல்லாமே பயங்கரமான காட்சிகள்

செல்வராஜ் எம்