Wednesday, December 10, 2014

இனியமகள்



இனிய ஜெயம்,

வனம் குறித்த வர்ணனைகளின் அழகு கூடிக் கொண்டே செளிக்றது. ''தீப் பட்ட பட்டு நூல் போல'' எனும் பதம் மனதில் உருவாக்கும் சித்திரம்  அலாதியானது.
[பிரயாகை 50

மழைத் துளிகள்  தேங்கி நீரொழுக்காக மாறி, சிறு நதியில் இணைவதும், அதன் ஒலியும், பகல் பிறக்காத அந்தி இரவும், என வர்ணனைகள் அனைத்தும் பீமனுக்கு தோளருகே நம்மை நிறுத்துகிறது .

ஆரம்ப அத்யாங்களில்  கெளரவர்களுடன் விளையாடுவது போலவே பீமன் குரங்குகளுடன் விளையாடுகிறான்.

முதலையின் விழிகளை தொட்டுப் பார்க்க விழையும் குரங்குக் குட்டிகளுக்கு அவை வாழ்நாள் கனவு அல்லவா? [என்னுடையது சுறா ஒன்றின் பல்லை சுட்டு விரல் நுனியால் கூர் பார்ப்பது. கொஞ்ச நாள் முன்புதான் நிறைவேறியது. ஆனால் சுறாதான் செத்துப் போய் இருந்தது]
இடும்பியின் தோற்றம் பேரழகு. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறாள்.

குந்தியை மற்ப்போருக்கு அழைக்கலாமா எனும் அவளது வெகுளித்தனமான கேள்வி இந்த இரவின் நிசப்த்தத்தில் வெடித்து சிரித்துவிட்டேன்.

அவள் பீமனை தொடர்ந்து 'கண்காணித்து' வந்திருக்கிறாள் என்பது தெரியவருகையில், இடும்பியின்'கண்டதும்' காதல் சொல்ல இயலாத  கிளர்ச்சியை அளித்தது.

இடும்பியின் சண்டையும், குரங்குகள் அவளை ஆராயும்போது அவள் அடையும் வெட்கமும்,

இனிய அத்யாயம்.

கடலூர் சீனு