ஜெ
தூளிகையும் சூர்ணனும் சரியான ஜோடி. அந்தக் காட்டில் அவர்கள் இயல்பாகவே வளர்ந்து காதல் கொள்கிறார்கள். அந்தப்பின்னணியில் ஆண்பெண் உறவின் மனோதத்துவ சிக்கல்களைப்பற்றி குந்தியும் அர்ஜுனனும் தர்மனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த முரன்பாட்டை யோசித்தேன்
குரங்குகள் இயல்பாக சரியான ஆணையும் பென்ணையும் தேர்ந்தெடுக்கின்றன. அதைத்தான் பீமனும் இடும்பியும் செய்கிறார்கள். அதை குரங்குகளும் புரிந்துகொள்கின்றன. மனிதர்கள்தான் அதில் அரசாங்கம் அதிகராம் என்று சம்பந்தமில்லாதவற்றைக் கலந்துகொள்கிறார்கள்
இவர்கள் அஸ்தினபுரியை அடையும்போது தூளிகையும் சூர்ணனும் பெற்றுப்பெருகி காட்டை நிறைத்திருப்பார்கள் இல்லையா?
சாரதி