Saturday, December 13, 2014

இடும்பியின் காதல்




ஜெ சார்

இடும்பியின் குணச்சித்திரம் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. ஒரு காட்டுப்பெண்ணின் வசீகரமும் ஆற்றலும் பிடிவாதமும் பேரன்பும் எல்லாமே கண்முன் நிற்கிறது. இந்தக்கதை முன்னதாகவே தெரிந்ததுதான் என்றாலும் இப்போதுதான் இத்தனை நுட்பமாக வாசிக்கிறேன்

அவள் பீமனைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கிற இயற்கையான தன்மை மிகவும் அழகு. அதிலே எந்த பாவனையும் இல்லை. அவள் வெட்க்படுகிறாள். ஆனால் ஆணிடம் சென்று நீ எனக்கு வேண்டும் என்று கேட்பதற்கு வெட்கமே படவில்லை

அவளும் பீமனும் கழுத்தில் மலர்மாலைகளுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியை சன்முகவேல் வரைவார் என்று நினைத்தேன்

பிரபாகர் சென்னை