Friday, December 12, 2014

சூர்ணன்



ஜெ

வெண்முரசு நாவல்களின் முக்கியமான அழகு அதில் வரும் சின்னக்குட்டி மிருகங்கள் இன்றைக்கு சூர்ணனை வாசித்துக்கொண்டிருந்தபோது .குஹ்யஸ்ரேயஸ் என்ற கழுதைப்புலி ஞாபகம் வந்தது. அதற்கும் முன்னால் ஷிப்ரதேஜஸ் என்ற நாய்க்குட்டி வந்தது.

இந்தக்குட்டிகள் என்ன சொல்கின்றன? வீரம் விவேகம் என்று சொல்லப்படுபவை எல்லாம் மனிதன் உருவாக்கிக்கொள்பவை அல்ல  என்று சொல்கின்றன. இயற்கையிலேயே அவை உருவாகி வந்துவிடுகின்றன. சூர்ணனிடம் இருக்கும் இந்த விளையாட்டுத்தனமும் வீரமும் அவன் குலத்தில் தெய்வங்கள் கொடுத்தவை. அல்லது மூதாதையர் கொடுத்தவை

நாம் மகத்தான மனிதகுணங்களாக நினைக்கக்கூடியவை எல்லாமே இயற்கையின் சில துளிகள் மட்டும்தான் என்று காட்டுகின்றன இவை

சூர்ணனைக் கண்டால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. அதுவும் அவன் ஒவ்வொரு முறையும் தர்மனைப் பார்த்து திகைத்து ‘வேடிக்கையான மனிதன்’ என்று கருத்துமுத்து உதிர்ப்பது அற்புதம். சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை

ரகுராம்