ஜெ,
அரக்குமாளிகை எரிவதும் பாண்டவர்கள் தப்புவதும் நான் சின்னவயசிலேயே கேட்ட கதை. ஆனால் வெண்முரசில் ஒரு பெரிய பதற்றத்துடனும் பரவசத்துடனும்தான் வாசித்தேன்
நீங்கள் அந்தக்கதையை ஒரு சிறுவர்கதை போல சுவாரசியமாக ஆக்கியிருந்தீர்கள். மிக நுட்பமான தகவல்கள். அரக்குமாளிகை அமைப்பது, குகைப்பாதையை வெட்டுவது எல்லாமே சூட்சுமமாக இருந்தன
அதோடு கதையாக இல்லாமல் காட்சியாக இருந்ததும் முக்கியமான காரணம். உண்மையிலேயே எரியும் வீட்டையும் குகைப்பாதைக்குள் உள்ள இருட்டு நிறைந்த சேற்றுபாதையையும் கண்ணால் பார்க்க முடிந்தது. அங்கே வாழமுடிந்தது
ஆனால் பின்ன யோசித்தபோது அத்தனையும் குறியீட்டு அடையாளங்களாக ஆகிவிட்டிருப்பதுதான் அந்த பரவசத்துக்குக் காரணம் என்று தெரிந்தது. சிதையில் எரிந்து செத்துப்போகிறார்கள். அதன்பிறகு அவர்கள் கருப்பாதை வழியாக மீண்டு வருகிறார்கள். கருப்பாதையின் வாயாக இருக்கும் அந்த கிணறும் சரி தொப்புள்கொடி போன்ற கொடியேணியும் சரி காவியம்போலவே இருந்தது
அதுதான் அந்த அனுபவத்தை மறக்கமுடியாததாக ஆக்குகிறது என்று நினைத்துக்கொண்டேன்
சாரதி