Thursday, February 12, 2015

கொல்லும் கலைமகள்



ஜெ,

நலமா?

நீண்டநாட்களாக கடிதம் எழுத நினைப்பேன். எனக்கு எழுத வராது என்பது தெரியுமே. நினைத்தாலும் எழுத முடியாது. கொஞ்சம்கொஞ்சமாக நாலைந்துநாட்கள் வைத்து எழுதுவேன். ஆனால் இந்தக்கடிதம் எழுதவேண்டியிருந்தது.

தெய்வங்களின் அடுக்கை வைத்துப்பார்த்தால் திரௌபதி தருமனுக்கு கலைமகளாக வெள்ளைக்கலை உடுத்தி வருவாள் என்று நினைத்தேன். முன்னாடி அப்படித்தானே வந்தாள். பிறகு நினைத்துப்பார்க்கையில் அது சரியா என்றும் தோன்றியது

ஆனால் அவள் மோகினி போல வந்து நிற்கிறாள். ரத்தம் குடிப்பதுபோல அவனை அணுகுகிறாள். ஏனென்று தெரியவில்லை. அதைப்பற்றி நினைத்துகொண்டிருந்தேன். அப்போது தொன்றிய விஷயம் இது

சரஸ்வதியே மோகினியாக வருவதுதானே இலக்கியம். நம் திரைகளை எல்லாம் கிழித்து நமக்குள்ளே உறங்குவதை எல்லாம் கிழித்து எடுத்து ரத்தமும் மாமிசமுமாக முன்னாடி வைப்பதுதானே

இலக்கியத்தையே இங்கே காட்டியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். அவள் சொல்லும் கதை. அவன் சொல்லும் கதை .இரண்டுமே அற்புதமான ஆட்டம்

சிவராஜ்