Monday, February 16, 2015

நிழலின் நிழல்



ஜெ

அர்ஜுனன் மாயையைக் கூடும் இடத்திலுள்ள நுட்பமான ஒரு விளையாட்டை நான் மறுவாசிப்பிலேதான் கண்டுபிடித்தேன். மாயையின் நிழலை அவன் திரௌபதி என்று நினைக்கிறான். அதை எண்ணி ஒரு கணம் திடுக்கிடுகிறான். அதை அவளிடம் சொல்கிறான். உன் நிழல் என்கிறான். அவள் அது மாயையின் நிழல் என்கிறாள்

ஆனால் முன்பு நீ ஓசையின்றி வந்தாயே என்று கேட்டதற்கு நான் நிழல் அல்லவா என்கிறாள். தேவியின் நிழல் மாயை. ஆனால் மாயையின் நிழல்தான் தேவி என்ற ஒரு விளையாட்டு அங்கே நிக்ழந்திருக்கிறது. மாயையை அடைந்து தேவியை அடையப்போகிறான். நிழலை புணர்ந்தபின் நிஜத்தை. அல்லது நிழலின் நிழல்தான் அவள்

நுட்பமான ஆட்டம். நீங்களும் நாங்களும் செய்துகொள்வது

சிவம்