Friday, February 20, 2015

பித்து

 
 
உங்களின் பித்தனின் பத்து நாட்கள் படித்தேன். உங்களுக்குள் குமுறும் தேவியை வென்முரசு படிக்கும் எவரும் உணரமுடியும்.
சில நாட்களுக்கு முன்பு என் மனைவி என்னிடம் வந்து தன மொபைல் போனில் ஏதோ சிறு பிரச்சனை என்று கூறி பார்க்க சொன்னார் மிகுந்த கோபம் கொண்டு சற்று கடுமையாக திட்டிவிட்டேன் அவள் திகைத்து நின்றுவிட்டு சிறிது கண்கலங்கி சென்றுவிட்டால். பிறகு நாள் முழுதும் என்னிடம் பேசவில்லை நான் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்தேன் இருந்தும் அவள் கோபம் தீரவில்லை. 
 
அடுத்த நாள் சங்கர் (லண்டன்) வீட்டிற்கு வந்தான். மிக உரிமையோடு  அவனிடம் நடந்தவைகளை எல்லாம்  கூறி பஞ்சாயத்தை கூட்டிவிட்டால். நான் திட்டிய வார்த்தைகளை கேட்டதும் அவன் என்னிடம் கோபமாக திரும்பி "லூசா டா நீ" என்றான். அதில்ல டா வென்முரசு படிச்சுக்கிட்டு இருந்தேனா அப்ப வந்து அவ..... அப்படினு சொல்லும்போதே அவன் நீ என்னவேணா படி அதுக்கு அப்படியா பேசுவ? னு கேட்டான் அதன் பிறகு நான் ஒன்னும் பேசல என்ன சொல்ல்றதுனும் புரியல அவங்ககிட்ட வென்முரசு படிக்கும் போது உள்ள என்னோட மனநிலைய எப்படி புரிய   வைப்பேன்? காந்தார பாலைல நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற வெம்மையை என்னன்னு சொல்ல?
 
செந்தில்குமார், சென்னை