ஆண் பெண் இடையிலான காமம்
அவர் இருவரும் ஆண் பெண் என்பதால் மட்டுமே
ஏற்படுகிறது என்று கூறமுடியுமா? விலங்கினத்தில் காமம் ஏற்பட ஒன்று
ஆண் இன்னொன்று பெண் என் இருப்பதே
அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால் மனித இனத்தில்
ஆண் பெண் என இருப்பதையும்
தாண்டி வேறு சில கூறுகள்
தேவைப்படுகிறது. ஆண் பெண்ணுக்கு இடையே
சில உறவுமுறைகளில் காமம் முற்றிலுமாக விலக்கப்பட்டிருக்கிறது.
இது மனித இனம் முழுதும்
பின்பற்றப்படுவதாக இருக்குகிறது. வெகு அரிதாக சில
விதிவிலக்குகள் இருக்கலாம். இப்படி மண உறவு,
உடன் பிறந்த ஆண் பெண்ணுக்கிடையே
முற்றிலுமாக தவிர்க்கப்படுவதற்கு காரணம் சிறு வயதிலிருந்தே சொல்லிச்
சொல்லி வளர்க்கப்பட்டது மட்டும் தானா? அல்லது
இயற்கையாகவே, உடலியல் ரீதியாக ஒரு விலக்கம்
இருக்கிறதா?
வெறும்
பண்பாடு மட்டும் காரணம் என்றால்
ஏன் உலகின் அனைத்து மனித
இனங்களிலும் ஒன்றுபோல் இது தவிர்க்கப்படுகிறது. சகோதர
சகோதரிகளுக்கிடையே மண உறவு தவிர்க்கப்படும்
உளவியல் பிறப்பிலேயே பெறப்பட்டதா? தன் பிள்ளைகளைகள் மேல்
பாசம் வைத்து அதை பாதுகாக்க
வேண்டும் என்ற உளவியல் பிறப்பிலேயே
வருவதைப்போல இதுவும் பிறப்பிலேயே வருவதாக
இருக்குமோ? மேலும் நெருங்கிய உறவுகளுக்கிடையே
பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடுகள் இருப்பதற்கு அதிக சாத்தியம் உண்டு
என்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு மலரிலும் ஆண்
கூறான மகரந்தமும் பெண் கூறான சூலகமும்
இரண்டும் இருக்கிறது. ஆனாலும் ஒரு பூவில்
இருக்கும் மகரந்தம் அதே பூவில் இருக்கும்
சூலகத்தில் இணைந்து கருவுருதல் நடப்பது
தவிர்க்கப்படுகிறது,
வேறு வழியே இல்லாதபோது சுய
கருவுருதல் நிகழ்கிறது. ஆக இப்படி உடன்
பிறந்தாருக்கிடையேயான உறவு தவிர்க்கப்படுவது மனித
இனத்தில் மட்டுமே நடைபெறும் ஒன்றல்ல. ஆகையால் இந்த உறவு
தவிர்ப்பு மனிதன் தன் சிந்தனையால்
மட்டுமே வள்ர்த்தெடுத்த ஒன்றென்பது ஐயமாகிறது. ஒருவேளை இது மனிதர்களின்
அணுக்களிலேயே எழுதப்பட்டதாக இருக்குமோ?
மேலும்
காதலர்களின் பாசத்தில் ஒரு குறை இருக்கிறது.
அதில் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. தன்
காதலரிடம் உடல் சார்ந்து தன்
காமத்தைப்பூர்த்தி செய்வதற்கான ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால் உடன் பிறந்தவர்களுக்கிடையேயான பாசத்தில் இதைப்போன்ற களங்கங்கள் இல்லை. அதனால் உடன்பிறப்பினால
வரும் உறவு உன்னதமானதாகிறது. மனிதனாக இருப்பதின்
அறம் இந்த உறவைக் இப்படி
களங்கப்படுத்த அனுமதிப்பதில்லை எனக் கொள்ளலாம்.
இதன்படி
பார்த்தால் கசன் தேவயானியின் காதலை
மறுப்பதன் நியாயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
தேவயானியின் நலனுக்காக அவன் எந்த தியாகத்தையும்
செய்வான். ஆனால் அவளை அவனால்
மணம் புரிந்துகொள்ள முடியாது. கசன் தேவயானியிடம் சொல்கிறான்:
என்
பிறவிமுன் வாழ்க்கையின் நினைவுகள் அனைத்தும் நம் தந்தையிடமிருந்து வந்தவை, நாம் இணையக்கூடாது. அவ்வெண்ணமே என் உள்ளத்தைக் கூசி அருவருவருக்கச் செய்கிறது” என்றான்.
“ஆனால் உனக்குக் கணவனாக வாழ என் உடலும் உள்ளமும் ஒப்பாது. அக்கணமே வாளெடுத்து என் கழுத்தை அறுத்துகொண்டு உன்முன் இறந்து விழுவேன்” என்றான்.
“ஆனால் உனக்குக் கணவனாக வாழ என் உடலும் உள்ளமும் ஒப்பாது. அக்கணமே வாளெடுத்து என் கழுத்தை அறுத்துகொண்டு உன்முன் இறந்து விழுவேன்” என்றான்.
பண்பாடு மனிதர்களால் எற்படுத்தப்படும் சமூக விதிமுறைகளின் தொகுப்பு. ஆகவே தெய்வங்களி நெறி என்பது பண்பாடு அல்ல. அது பிறப்பிலேயே வருவதைக் குறிக்கிறது. ஆகவே கசனின் மனதை மாற்ற தேவயானியால் முடியாமல் போவதற்கு பண்பாட்டையும் தாண்டி நிற்கும் ஒன்றினால் அவன் மனம் அடையும் மனவிலக்கம் ஆகும். அது ஒருவேளை பிறப்பிலேயே வருவதாக உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம் என்று கருதுகிறேன்.
தெய்வங்களின் நெறிக்கெதிராக எவரும் வாய்மையை துணைக்கழைக்க முடியாது. நெறிநூல்கள் அதை ஒப்புவதில்லை.
அப்படியென்றால இந்த மன விலக்கம் ஏன் தேவயானிக்கு ஏற்படவில்லை? ஏனென்றால் அவள்கொண்ட காதலின் காரணமாக இப்போதும் பழைய கசனையே காண்கிறாள். தன் தந்தையின் கூறுகள் வெளிப்படும் புதிய கசனை மனதில்கொள்ள மறுக்கிறாள். ஒருவேளை அவள் கசனை வற்புறுத்தி திருமணக் கொண்டிருந்தால் விரைவில் அவள் அவனை தன் உள்ளத்தாலும் உடலாலும் உடன் பிறந்தவன் என்று உணர்ந்து அவன்மேல் மன விலக்கம் கொண்டு இவ்வுறவில் மனம் கூசி வருந்தியிருப்பாள் என்றே நினைக்கிறேன்.
தண்டபாணி துரைவேல்