Saturday, April 1, 2017

கனவு



அன்புள்ள ஜெமோ

வெண்முரசு பலவகையான வாழ்கையை சொல்லிசென்ற்ருக்கிறது. ஆனால் ஆண்பெண் உணர்வுநிலையில் உள்ள காமம் என்னும் இடத்திற்குள் இன்னும் இன்னும் செல்ல இடமிருக்கிறது என்பதைத்தான் தேவயானியின் கதையிலே காணமுடிகிறது. அவளுடைய இயல்புநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் காட்சி அற்புதமாக அமைந்துள்ளது. முள்முனையில் பட்டாம்பூச்சி  என்னும் உருவகம் அதைக்காட்ட அருமையான உவமையாக அமைந்துள்ளது. அதோடு கனவு நனவு என்னும் மயக்கமும் அந்த மனநிலையை நுட்பமாகக் காட்டுகிறது

மோகன்