ஜெ,
சூரிய வம்சத்தை சேர்ந்த இளை புதனிடம் இணைந்து ஆயுஸ்ஸைப்
பெறுகிறாள். ஆயுஸ், நகுஷன், யயாதி என்று சந்திர வம்சம் தொடர்கிறது. யயாதி
தேவையானியை மணந்து கொண்டார்.
மறுபக்கம் இளையின் சகோதரன் இக்ஷுவாகுவிலிருந்து
ஹரிச்சந்திரன், பகிரதன், திலீபன், ரகு, அஜன், தசரதன், ராமன் என்று சூரிய
வம்சம் தொடர்கிறது.
மேற்கூறியவை சரியாக இருந்தால், மாமலரில் தேவயானி சீதையைப்
பற்றி நினைப்பதாக வரும் //சீதையின் அணிகளை கிஷ்கிந்தையின் குரங்குகள்
அணிந்துகொண்டதைப்பற்றிய சூதர்பாடலின் வரிகள் நினைவிலெழ அவள் கைகள் தயங்கத்
தொடங்கின.// வரி சரியானதா என ஐயம் எழுகிறது.
அரசன்
அன்புள்ள அரசன்
நீங்கள் சொல்வது வம்ச வரிசையின்படி
சரிதான். ஆனால் சீதை முந்தைய யுகத்தைச் சேர்ந்தவள் என்னும் பொருளில் நான்
எடுத்துக்கொண்டேன். உண்மையில் மகாபாரதத்தின் கதைநிகழ்வுகளுக்கும் முந்தைய
வளர்ச்சிக்காலகட்டத்தைச்சேர்ந்ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் தேவயானி கசன் கதை மிகப்பழையது. அதற்கும் சந்திரகுல அரசன் யயாதியின் மைந்தனாகிய தேவயானிக்கும் தொடர்பில்லை. இரண்டுகதைகளும் இணைக்கப்பட்டுள்ளன
வம்சவரிசையின்படி இது பிழை. இப்படி ஒரு காலமயக்கமாகவே விட்டுவிடலாமா இல்லை திருத்தலாமா என குழப்பமாக இருக்கிறது