ஜெ
வெண்முரசில் வரும் விடியல்களும் அந்திகளும் அழகானவை. குறிப்பாக
அவை ஏதேனும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது. மாமலரில் தேவயானி தென்முனைக்கன்னி போலமூக்குத்தி
ஒளிவிட நின்று பின்னர் மீண்டு வரும்போது அந்த காலையை கிருதர் உணரும் இடம் அழகானது.
ஒரு பெரிய சிம்பனி போல அந்தக்காட்சி மேலே எழுந்துவருகிறது. ஒவ்வொரு வரியும் காட்சிரீதியாக
நுட்பமானது. நனைந்த பட்டுபோல. மூழ்கியிருந்து பார்க்கும் நீரின் மேல்தளம்போல காலையில்
வானம் தெரிகிறது. சிவந்த பொடியை சருகுமேல் விரித்ததுபோல சூரியவெளிச்சம் தெரிகிறது.சிற்றகலின்
வெளிச்சம் போல இலைகள் நடுவெ எழுகிறது. அது தேவயானியின் மனம் விடிவதுதான் என்னும்போது
அந்த அழகு அபாரமானது
சிவம்