Monday, April 24, 2017

வினாக்கள்



வணக்கம்.

சில விஷயங்கள் மற்றும் கேள்விகள்.

1) மாமலர் – 75
///அரவுச்சுழல் ஆடிக்கொண்டிருந்தனர் ///
அரவுச்சுழல் - பரமபதம் ஆட்டமா ?

2) கிராதம் – 56 : ஏழு வேள்விகள்
"....எடுத்தவை மேலும் வளரவிடுதல் அஃபிஜனனம், சிற்றுயிர்களையும் ஓம்புதல் உபகாரம், இங்கிருப்பவற்றின் ஒழுங்கு குலையாது நுகர்தல் ருதம்...."
இவைகள் "Sustainable development" என்று நாம் இப்போது சொல்வதற்கு முன்னோடியாக உள்ளன. "ருதம்" - காந்திஜி நுகர்வை பற்றி சொன்னதற்கு நெருக்கமாக உள்ளது. 

3) கிராதம் – 72 : ருத்ரர்கள் 11 தானே. இங்கே பதினாறு என்று வருகிறது.

4) சொல்வளர்காடு – 33
கார்கி, மைத்ரேயி - இவர்களின் குருகுலம் "சாக்தம்" ?

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.

அன்புள்ள ராஜாராம்

1. ஆம் பரமபதம் ஆட்டம்தான். நரகம் பாம்புகளால் ஆனது என்னும் உருவகம் அது

4 ஷோடச ருத்ரர் என தனிக்கணக்கு உண்டு. அதில் சூரியனையும் எமனையும் எல்லாம் சேர்ப்பார்கள்.

5 அன்று சாக்தம் ஒரு தனிமதமாக இல்லை. அதன் தொடக்கநிலை என சொல்லலாம்
ஜெ