Friday, April 12, 2019

சிறுகதைகள்



அன்புள்ள ஜெ

இருட்கனி முதல் அத்தியாயம் நாட்டார்கதை ஒன்றின் செவ்வியல் வடிவம்போலிருந்தது. அந்தக்கதையிலிருக்கும் நீதியை விட அதிலுள்ள வெவ்வேறு மனநிலைகள் திகைக்கச்செய்தன. அர்ஜுனன் கொடுக்கும்போது இரவலர் அவனை எதிரியாக ஆக்கிக்கொள்கிறார்கள். தங்களுக்கு உரிமையானதை அவன் எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொள்வது மிகக்கடினமாக உள்ளது. ஒரு சிறு கதைபோல் உள்ளது. அதற்குள் எத்தனை நகர்வுகள். கடைசியில் கஜலட்சிமி தோன்றுவதுவரை பல கிளைமாக்ஸ்கள்

ஜெயச்சந்திரன்