அன்புள்ள ஜெ .
கார்கடல் .இதில் எத்தனை தந்தை மகன்களின் கதைகள் அபிமன்யூ,அர்ஜுனன் லட்சுமனன்,துரியன் துர்முகன் ,துச்சாதனன் ஜெயத்ரதன்..அவன் தந்தை, கடத்கஜன்,பீமன் திருஷ்டத்துய்மனன் .. துருபதர்.இறுதியாக து ேரானர்..அஷ்வத்தாமன்
அர்ஜுனன் கடைசியாக எய்த அம்பு எது?அது "தான் "அல்லது குரு பற்று என்ற அம்பு ,அகங்காரத்தை அழித்த பின் அவன் அனைத்தையும் பெறுகிறான்.அம்பராதுணி நிறைந்து வழிகிறது.வில் முனிவர் சரத்வானர் பிறக்கும் பாேது அம்புடன் பிறந்தார் என்கிறது வெண்முரசு அதன் பெயரும் .ஸ்வம் தானாே?..
துராேணர் தன் மகனுக்காக எதையும் செய்பவர்.களம் நின்றதும் அவனுக்காக தான்.அஷ்வதாமனை கெல்ல கூடியவன் அர்சுனன் மட்டுமே என்று எண்ணியவர் அபிமன்யூவுக்கும் அந்த ஆற்றல் உண்டு என கண்டு பயம் கெள்கிறார் .அதனாலே நெறி மீறி அபிமன்யூவை காெல்கிறார். அஷ்வதாமனை காெல்ல கூடாது என்று சத்தியம் வாங்கியவனின் மகனை காெல்கிறார்.
அர்ச்சுனன் தன் மகனை பலியிட்டே பாே ர்களம் புகுகின்றான்.அதனாலே அர்ஷுனன் துராேணரை விஞ்சி நிற்கிறான.
இப்படிக்கு
குணசேகரன்.