Thursday, August 8, 2019

அழுவதும் சிரிப்பதும்




ஜெ

வெண்முரசின் கிரியேட்டிவான பகுதிகளில் ஒன்று போர் முடிந்தபின்னர் மீண்டும் சந்திக்கும் கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் உணரும் பொருளின்மையும் அபத்தமும். அழுவதும் சிரிப்பதும் இரண்டுமே ஒன்றுதான் என்பதுபோன்ற அந்த நிலை. அவர்கள் பேசிக்கொள்ளும் எல்லா வார்த்தையும் கசப்பும் துயரும் நிறைந்ததாக உள்ளது. கசப்பின் உச்சியில் அவர்கள் அழுவதற்குப் பதிலாகச் சிரிக்கிறார்கள். 

இந்தக் காட்சியை நானே பார்த்திருக்கிறேன். என் பெரியப்பா ஒருவர் தொழிலில் திடீரென்று எல்லாவற்றையும் இழந்துவிட்டார். அதைப்பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார்கள். வீட்டில் எல்லாரும் அழுகை. சட்டென்று அவர் சிரித்தார். நான் அப்போது சின்னப்பையன். அவர் சிரித்துப்பேச ஆரம்பித்ததும் அவருக்கு மனசு கலங்கிவிட்டதோ என்று சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவர் நார்மலாகவே இருந்தார். அதன்பின் சின்ன கடைவைத்து வாழ்ந்தார். அந்தச் சிரிப்புதான் அவரைக் காப்பாற்றியது என்று தோன்றியது. அந்தச்சிரிப்பை மீண்டும் கிருபரிடம் கண்டபோது ஒரு எபிக் எவ்வளவு வாழ்க்கைக்கு நெருக்கமாக உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்

எஸ்.ஆர்.செந்தில்