ஜெ
பாஞ்சாலி இன்னும் கூட கதைக்குள்ளே வரவில்லை. ஆனால் அவளுடைய பர்சனாலிட்டி வந்துகொண்டே இருக்கிறது. விறலியின் கதை வழியாக அவள்தான் வருகிறாள். இதிலே வரும் கதைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அவளைத்தான் காட்டுகின்றன. ஆரம்பத்திலே கங்கை,தபதி கதை. அதன்பிறகு இந்தக்கதை. இதெல்லாம் அவள் அகத்தைக்காட்டிக்கொண்டே இருக்கின்ற்ன. அதோடு விறலி அவளைப்பற்றிச் சொல்லும் இடமும் அவளை காட்டுகிறது. இந்த நாவல்களில் இனி முக்கியமான கதாபாத்திரமே அவள்தானே?
பெண்ணென ஆகி வந்துள்ளது பெருவிழைவென்று அறிக. உண்ணவும் கொள்ளவும் முகிழ்க்கவும்நிறைக்கவும் எழுந்த பேரவா. ஐந்த் முகம் கொண்டு எழுக அனல். ஐவருடனும் கூடியாடும் ஐந்துதேவியரை வணங்குகிறேன். ஐவரில் உறைந்து அனைத்தையும் நோக்கி அகன்றிருக்கும் அன்னை சண்டிகையைவணங்குகிறேன்
என்ற வரிக்குமேல் அவளைப்பற்றி என்ன சொல்லிவிடமுடியும்?ம்