Saturday, February 7, 2015

ஐங்கால பூசை



கொன்றுண்ணும் வேங்கையின் செவ்விதழ் கண்டு காமுறுகிறீர்கள் பாணன் சொல்லும் இந்த வரி தீர்க்கதரிசனம் போலவே ஒலிக்கிறது ஜெ. இந்தப்பகுதி முழுக்க அந்த உக்கிரம் இருக்கிறது. ஒரு கொடுந்தெய்வத்துக்கான வழிபாடுகளைச் சொல்வதுபோலவே சொல்கிறான். 

சில தேவிகோயில்களில் தேவிக்கு ஐந்துவேளை வழிபாடுகள் உண்டு. இவறை பஞ்சகால கிரியைகள் என்பார்கள். அதன்பின்னர் தேவியை கோயிலில் வைத்துப்பூட்டிவிட்டு கைகளை கொட்டியபடி சென்றுவிடுவார்கல். அதன்பின்னர் தேவி அங்கே தனித்திருப்பார்கள். பிறகு எவரும் உள்ளே போகக்கூடாது.

இதெல்லாம் கேரளத்திலே மிகச்சரியாகப்பண்ணிவருகிறார்கள். நீங்கள் இந்தச்சடங்குகளையெல்லாம் கேரளத்திலே கண்டதனால்தான் சரியாக எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது அதையே நினைவில் வைக்காமல் தன்போக்கிலே சரியாக எழுதியிருக்கிறீர்கள்

தேவிக்கு ஏற்பாடு செய்யப்படும் அந்த ப்ஞ்சகாலபூசைகள் ஆச்சரியமளிப்பவை. அவற்றில் பலிதான் முக்கியமானது. மலர், நீர் கொடுப்பதெல்லாமேகூட பல்கி என்றுதான் சொல்லப்படுகின்றன. தேவிக்குக் கொடுக்கும் பலை ஸ்ரீபலி என்று சொல்லப்படும்

சுவாமி