ஆசிரியருக்கு ,
கிருஷ்ணன்
தேரோட்டி – 9, வெண்
முரசில் ஒரு புதிய தரிசனம் , அழகையும் அநித்தியத்தையும் கவித்துவமாக
இணைத்துவிட்டீர்கள். ஒன்றின் அழகு இன்னொன்றில் எழுவதும் அது அனைத்திலும்
பிரதிபலிப்பதும் அற்புதம்.
பகுதி 8 இல் இருவேறு
தொன்மங்களின் இணைப்பு மயக்கம் என்றால் இதில் ரிஷபரின் கதை. நமது
அருகர்களின் பாதையையும் எல்லா இடத்திலும் கண்ட புலி கன்றுக்கு பால் தரும்
ஓவியத்தையும் நினைவு மீட்டினேன்.