பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே! –அபிராமி அந்தாதி.
அன்னை பராசக்திக்கு இவ்வளவுதான் நாமங்களா? ஆயிரத்தெட்டு நாமங்களுக்கு அப்பாலும் நாமம் கொண்ட அன்னைக்கு இப்படியும் சில நாமங்கள் இருக்கு. பெயரை கேட்கும்போது சும்மா அதிற அடிக்கிறாள். ஸ்ரீமாதாவாகிய அன்னை ஏன் இப்படி அதிரடிக்கும் நாமங்களையும் கொண்டு விளையாடுகின்றாள். அன்னை முழுதானவள், முழுதாகமால் அவளால் இருக்க முடிவதில்லை. பொத்தி பொத்தி கருவளர்ப்பாள், பெற்று எடுக்கும்போதே ஒன்று இரண்டு குட்டிகளையும் தின்பாள். ஸ்ரீமாதா என்ற பெயரோடு மட்டும் அவளால் இருக்கமுடியவில்லை. மஹாக்ராஸா மஹாசனாவாகவும் ஆகின்றாள். அண்டங்களையே பெற்று எடுப்பதுபோல அண்டங்களையே ஒரு கவளமாகவும் உண்ணுகின்றாள். நிர்அகங்காரா என்று சொல்லிக்கொள்ளும் அன்னை அதிகர்விதாவாகவும் ஆகின்றாள்.
எங்கே நிர்அகங்காராவாக இருக்கிறாள்?, எங்கே அதிகர்விதாவாக ஆகின்றாள்? என்பது எல்லாம் அவள் விளையாடும் விளையாட்டுதான். இரண்டாக நமக்குத்தெரிகிறது. ஒன்று என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். பீஷ்மகனின் ஆடைப்பற்றி விளையாட நினைக்கும் மந்தன், அண்ணனால் தள்ளப்படும்போது “நாளைக்கு நான் வளர்ந்து பெரும் புயலாக மாறுவேன்” என்று சினம்கொள்ளும்போது நிர்அகங்காரம், அதிகர்வமாக மாறுகிறது. சக்தியின் இரும்பெரும் நிலைகள் மந்தனுக்குள் கிளைத்து விளையாடிச்செல்கிறது.
கண்டர்கள் செய்யும் முதல்போர் அதிகர்விதாவின் ஆடல் என்றால், இரண்டாவது போர் குஜ்ஜர்களின் அதிகர்விதாவின் ஆடல். முதல்போர் நடக்கும்போது நாம் குஜ்ஜர்கள் பக்கம் இருந்தால் நம்மை நிர்அகங்காரா ஆட்கொண்டு கண்டர்கள் எத்தனை கொடுமையானவர்கள் அதிகர்விதாக்கள் என்று சொல்லவைக்கிறது. இரண்டாவது போரில் நாம் கண்டர்கள் பக்கம் இருந்தால் அதே நிர்அகங்காரவால் ஆட்கொள்ளப்பட்டு குஜ்ஜர்கள் எத்தனை கொடுமையானவர்கள் அதிகர்விதாக்கள் என்று எண்ண வைக்கிறது, அன்னை நிர்அகங்காராவாகவோ அல்லது அதிகர்விதாவாகவோ இல்லை, அவள் ஸ்ரீமாதவாகவே இருக்கிறாள். தனது பிள்ளைகளின் உணவை இரண்டாக பிரிந்து விளையாடல் மூலம் கிடைக்கவைக்கிறாள். கண்டர்கள் கெட்டவர்களா? குஜ்ஜர்கள் கெட்டவர்களா? யாரும் கெட்டவர்கள் இல்லை. விளையாட்டுக்களத்தில் ஒருவன் தொட்டுவிட முயல்கிறான் ஒருவன் தொடவிடாமல் பிடித்துவிட நினைக்கிறான். ஆடு பிறக்கும்போதே ஓநாயும் பிறக்கிறது. இரண்டுக்குள்ளும் அதிகர்வமும், நிர்அகங்காரமும் இருக்கிறது. எங்கே எது மிஞ்சுகிறது என்பது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சிலநேரம் இறைவனை நல்லவர் என்று நினைக்கிறேன், சிலநேரம் இறைவனை கெட்டவர் என்று நினைக்கிறேன் என்கிறார். முதல்போரில் கண்டர்கள் குஜ்ஜர்களின் குழந்தைகளை, முதியவர்களை பெண்களை கொல்லும் கொடுமைகளைப்பார்த்து இறைவன் இத்தனை கொடுமையானவான என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை, அது பீஷ்மகனின் யதார்த்தமனா விளையாட்டு. மந்தனின் வாளோடு குஜ்ஜர்கள் கண்டர்களை முற்றும் அழிக்கும்போது இறைவன் இத்தனை கொடுமையானவான என்றுதான் நினைக்கதோன்றுகின்றது. இது மந்தன் புயலாகும் விளையாட்டு. பீஷ்மகனும் மந்தனும் அவனுக்கு அவனுக்கு உரிய விளையாட்டை விளையாடுகிறார்கள். வேடிக்கைப்பார்க்கும் நாம்தான் அது சரி இது தப்பு என்று தீர்ப்பு எழுதிக்கொண்டு இருக்கிறோம். மஹாக்ராஸாவான ஸ்ரீமாதாவின் பெரும் பசிக்கு யாரால் பெரும் கவளத்தை சமைக்கமுடியும். அவள் உருட்டும் பெரும் கவளப்பாத்திரம் அல்லவா இந்த பூமி. யார் கண்டது இதுகூட அவளுக்கு சிறு கவளமாக இருக்கலாம்.
பெரும்போரில் தப்பி உயிர்பிழைத்து, ஓநாயிடமிருந்து உயிர் காத்து. பின்பு தற்கொலைக்கு முயன்று, மீண்டு, ஊழகத்தில் அமர்ந்து, எழுந்து, படைக்கொண்டு வென்று //தன் வாளைத்தூக்கி “இனி
நித்தியவலியும் நித்தியசுகமும் நிறைந்த உலகில் புடவியை சமைக்கும் அன்னை அதிலும் அப்பாலும் நிற்கிறாள்.
ராமராஜன் மாணிக்கவேல்
|
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்