அன்புள்ள ஜெமோ,
ஆரம்பத்தில் சற்றே அசுவாரசியத்துடன்
தான் அர்ஜுனனின் பயணம் தொடும் இந்தப்பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன். வெகு
வேகமாக இன்றைய அத்தியாயம் வரை படித்து முடித்தேன்.
நாகர்கள்
உலகம், மற்றும் மணிபூரகம் வரை அர்ச்சுனன் விழைவுகளாலேயே முன்
செல்பவனாகக்காணப்படுகிறான். நுகரும் எதையும் மறுக்காமல் முன் செல்கிறான்.
இப்போது அவனுக்கு சவாலாக ஐந்து முதலைகள் - அவை ஐந்து பொறிகளே அல்லவா?
எந்த ஒரு சாதகனின் பயணத்திலும் இந்த ஐந்து முதலைகள் வாய் பிளந்து காத்துக்கொண்டிருக்கின்றன.
அர்ச்சுனன் தப்பும் வழி எனக்கும் ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின் றேன்.
அன்புடன்,
ஜெய்கணேஷ்.
அன்புள்ள ஜெய்கணேஷ்
ஐம்புலன்கள் அல்ல. ஐந்து பிராணன்கள்.அபானன் முதல் ஊர்த்துவன் வரை
ஜெ