Sunday, October 25, 2015

பகடை

தசராவை முன்னிட்டு மைசூரில் சுற்றிகொண்டிருந்த போது, ஆசான் கிருஷ்ணனும் - சகுனியும் விளையாடியதாக கூறிய சதுரங்க விளையாட்டை ஒத்த ஒரு விளையாட்டின் தொல் எச்சத்தை , ஜெகன் மோகன் அரண்மனையில் கண்டேன். இவ்விளையாட்டை ஆசான் கற்பனையாக எழதினார என முன்னர் விவாதம் நிகழ்ந்து,ஆசானும் அதை விளக்கி இருந்தார்.

களம் சூரியனை போல மையத்தில் வட்டமாகவும்,அதன் கதிர்கள் எல்லாம் காய்கள் நகரும் கட்டங்களாகவும் ,துணியால் தைக்கபட்டுறிருந்தது.மையத்தில் சிப்பாய்களும் ,மற்ற காய்களும் சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் வட்டமாக அடுக்கப்பட்டு இருந்தது. உருட்டி விளையாடுவதற்கான தாயகட்டைகள் வெள்ளை பளிங்கால் செய்யப்பட்டு இருந்தது. 
இங்கே இது உள்ளதென்றால் தோரயமாக 1800 வரையிலும் கூட ,இது புழக்கத்தில் இருந்திருக்க கூடும்.இவ்விளையாட்டின் பல்வேறு மாதிரிகள் அங்கேயே காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
ஜோதி ராஜேந்திரன்