Sunday, October 11, 2015

விடுபடல்கள்


இனிய ஜெயம்,


சில ஆப்ரிக்க பழங்குடி  குறித்த ஆவணப் படத்தில். குடி விழாக்களில் பழங்குடியினர் தங்களது ஈட்டிகளில் மண்டை ஓடுகளை செருகி வைத்து அதை தூக்கி தூக்கி ஆடுகிறார்கள்.  அதற்குப் பின்னால் ''பிறனை'' வரையறை செய்யும் குருதியால் ஆன வரலாறு.

உங்கள் உரையாடல் ஒன்றினில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் நிகழ்ந்த பௌத்த பரவலாக்கமே இந்திய நிலத்தில் குடிகளுக்கு இடையே இருந்த இந்த குருதிச் சுவரை உடைத்தது. என்றீர்கள். அன்று அத்தகைய ஒரு குடிக்குள் ஒரு பௌத்தன் எங்கனம் ஊடுருவி இருப்பான் என்பதன் காட்சி இன்றைய  சித்ரசேகர் பச்சோந்தி குடிகளுக்குள் நுழையும் அத்யாயம்.

அத்யாத்தில் மற்றொரு மிக முக்கிய வரி வருகிறது. ஐந்து ''சிறுமிகள்'' நெருப்புத் துண்டுபோல சித்ர சேகரை  காத்து அடர் வனத்துக்குள் அழைத்து செல்கிறார்கள் . அடுத்த வரியே அந்த ''அன்னைகள்'' வழியே எங்கள் குடி பெருகியது என்று உரைக்கிறது. போதும் மீதம் யாவும் வாசக ஊகத்துக்கு.

சித்ராங்கதன் அவை நடுவே அவன் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவன் என்று அடையாளப் படுத்தப் படுகையில், [அதுவும் ஒரு பெண் ஆசிரியை கையால்] அவன் கொள்ளும் சுளிப்பு அழகு.

அர்ஜுனன் பெண்ணாகி மாறி, உலூபியை ஆணாக்கிய [புற்றுக்குள் நிகழ்த்திய] படைக்கலப் பயிற்சி  சித்ராங்கதனுக்கும் கிடைக்கப்போகிறதா என்ன/ :--}}. 

கடலூர் சீனு