அ .சேஷகிரி.அன்புடன்,இவனை மகாபாரதப்போர் ஆரம்பத்தில் 'களப்பலி' ஆக்கப் போகிறீர்களா அல்லது இவனையும் சில நாள் யுத்தத்தில் பங்கு கொள்ள செய்ய போகிறீர்களா என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.இன்றைய 'காண்டீபத்தில்' அவன் பெயர் அரவான் என்று படித்தபோது உண்மையில் அரவம் தீண்டியது போல்தான் இருந்தது.அரவானுக்கு தங்கள்பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,வணக்கம்.
வெண் முரசில் கிடைத்தது போன்ற அறிமுகம்!! ("Super Entry "!!) வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என உறுதிபட கூறலாம்.அதற்கு முன் பகுதியில் எழுதி இருப்பதை எல்லாம் படித்து படித்து மாய்ந்து போய்கிறேன்.
"“நாகம் இரண்டின்மை. இரண்டுமானது. அதன் வால் ஆண்மை, சிவக்கத்திறந்த வாயோ பெண்மை. தன் வாலை தான் விழுங்கி தன்னுள் முழுமை கொள்கிறது. முற்றுச் சுழல். சுழிமைய வெறுமை. உண்டு தீரா விருந்து. தன்னை உண்பதைப்போல் தீராச் சுவை என்ன? தன்னுள் தான் நுழைந்து நிறைக்கும் வெளி என்ன? தன்னுள் நிறையும் வெளியை தானன்றி எது நிறைக்க ஒண்ணும்?”
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்