Thursday, December 1, 2016

இந்திரனின் கதைகள்



அன்புள்ள ஜெ

இந்திரனின் கதைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து விரிந்துகொண்டே இருக்கின்றன. பிற்காலத்துப் பெருந்தெய்வங்கள் போல அல்லாமல் இந்திரன் மிகவும் கிரேக்க தெய்வங்களைப்போல இருக்கிறான். பெண்களைக் கவர்கிறான்.காமகுரோதமோகங்களுடன் இருக்கிறான். பொறாமைப்பட்டு மனிதர்களை அழிக்கிறான். வாழ்க்கைகளுடன் விளையாடுகிறான்

இந்த டிரைபல் அம்சம் இன்றுகூட நாட்டுப்புற தெய்வங்களுக்கு உண்டு. இதை நீங்கள் எழுதியிருந்ததாக ஞாபகம். இந்த கதையில் இந்திரன் குடித்து சோர்ந்து கிடப்பதும் அதை ஒருபக்கம் ரியலிஸமாகவும் இன்னொருபக்கம் உருவகக்கதையாகவும் சொல்லியிருப்பதும் நுட்பமாக இருந்தன

செல்வராஜ்