ஜெ
விருத்திராசுரன்
வரும் இந்தக்கதை பலவகையிலும் முக்கியமானது. விருத்திரன் அசுரன் என்று சொல்லப்படுகின்றான.
ஆனால் அவன் தீமையின் வடிவம் அல்ல. எல்லா மனிதகுணங்களும் கொண்டவன். ஒரு மூதாதை. அதேபோல
எல்லா மனிதகுணங்களும் கொண்ட ஒரு முதாதையாகவே இந்திரனும் இருக்கிறான்.
விருத்திராசுரன் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் அவனை
வேதம் பழிக்கவில்லை. அவனை மூதாதையாகவே கொண்டாடுகிறது. இந்த காலகட்டத்தில் தேவர் அசுரர்
என்னும் dichotomy உருவாகவில்லை என்றுதான் தோன்றுகிறது. அந்த காலகட்டத்திலிருந்து இந்திரன்
எப்படி பெருந்தெய்வமாக எழுந்தான் என்பதைத்தான் இந்தக்கதைகள் பலவகையில் சொல்கின்றன.
இந்தக்கதைகளுக்கு பலவடிவங்கள் உள்ளன.
அந்த்ப்பலவடிவங்களை
ஒன்றுடன் ஒன்று கலந்து இந்த விரிவானச் சித்திரத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். இதைக்கொண்டே
இந்திரனில் இருந்து தொடங்கி நமது deities உருவான வரலாற்றை வகுத்துக்கொள்ளமுடியுமென
நினைக்கிரேன்
சாரங்கன்