ஜெ
இந்திரனின் படிப்படியான
சித்திரம் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அவன் எப்படி தேவர்களுக்கு அரசனாக ஆனான் என்பது
மிகப்பெரிய ஒரு தரிசனம்போல வளர்கிறது. இந்திரனிலிருந்துதான் வெண்முரசே தொடங்கியிருக்கவேண்டும்
இல்லையா? முதற்கனலுக்கு முன்னாடியே இந்த அத்தியாயங்கள் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
விருத்திரன் – வருணன் என்னும் முரண் பாடுதான் உண்மையில் நம் புராணங்களிலுள்ள முக்கியமான
தொல்கதை. அதன்பிறகுதான் கத்ரு வினதை என்னும் முரண்பாடு. இந்தக்கதையிலிருந்து விரிவாகச்
செல்லமுடியும் என நினைக்கிறேன். இதைப்பற்றி சின்மயானந்தாஜி சொல்லியிருக்கிறார்.
ராமச்சந்திரன்