ஜெ
இந்திராணியின் நிலையை வாசித்தபோது ஒரு குழப்பநிலை மனசுக்குள் இருந்துகொண்டே இருந்தது. இந்திராணி மாறமாட்டாள் இந்திரன் தான் மாறுவான் என்பது ஒருவழக்கம். ஆனால் அதற்கு இப்படி ஒருநேரடியான அர்த்தத்தில் சித்தரிப்பை வாசித்தபோது பதற்றமாக இருந்தது
ஆனால் இது ஒரு யதார்த்தம். ஐஸ்வரியம் என்பது வெற்றிக்குப்பரிசாகக் கிடைப்பது. ஒருவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் வெற்றிபெற்றால் பலவிஷடங்கள் அவனைத்தேடிச்சென்றுவிடுகின்றன. முகலாயர் சபைகளில் இந்துமரபின் ஞானிகள் எல்லாம் சென்று நின்றிருக்கிறார்கல். அவர்கள் ராஜபுதனத்தின் அழகிய இளவரசிகளை மணம்புரிந்திருக்கிறார்கள்.
இங்குள்ள கலைகளும் சிந்தனைகளும் எல்லாம் அவர்களுக்கும் சேவைசெய்திருக்கின்றன. பின்னாடி பிரிட்டிஷார்வந்தபோதும்கூட இதேதான் நடந்தது. ஆக இது நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதுதான் நெறி என நினைக்கிறேன்
சங்கர்