Saturday, December 3, 2016

பொஸைடன்



ஜெ

வெண்முரசு நாவல் மிகவும் திசைமாறி செல்கிறது என்று எனக்குத்தோன்றியது. ஆரம்பத்திலேயே இந்த எண்ணம் இருந்தது. ஆனால் திடீரென்று வருணனின் சித்திரத்தைக் கண்டபோது இதை வேறு எங்கே பார்ப்பது என்றும் தோன்றியது. சொல்லப்போனால் இதெல்லாம் சொல்லப்பட்டபின்னர்தான் மகாபாரதக்கதையே சொல்லப்பட்டிருக்கவேண்டும். இந்திரனும் வருனனும் அவர்களின் வாழ்க்கமுழுக்க வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் முக்கியமான சித்திரங்களேதும் நாவலுக்குள் வந்ததில்லை. இவ்வளவு பிந்தி இப்போதுதான் வருகின்றன. ஆச்சரியமான விஷயம்தான்

இந்தச்சித்திரிப்பில் வருணனுக்கு தொன்மையான கிரேக்கத்தெய்வமான பொஸைடனுடன் இருக்கும் ஒற்றுமையும் குறிப்பிடத்தக்கது. பொஸைடனைப்பற்றி பல இடங்களில் வெண்முரசில் குறிப்புகள் வருகின்றன. இப்போதுதான் வருணனாக அவன் தோற்றமளிக்கிறான்

ஆனந்த் குமார்