Thursday, December 8, 2016

இந்திரகீலம்





ஜெ
\
வருணனின் காட்சிதான் மனதைவிட்டு அகலாமலிருந்துகொண்டிருக்கிறது. இப்போது அர்ஜுனன் இந்திரகீலத்திற்கு ஏறும்போதுகூட வருணனில் இருந்து தாவி மேலே ஏறுவதுபோல ஒரு மனச்சித்திரம் வருகிறது. இந்திரகீலமலையை தென்கிழக்கே அமைத்ததும் அழகுதான். நான் மலேசியா கம்போடியா பகுதிகளில் இத்தகைய சுண்ணாம்பு மலைகளைப் பார்த்திருக்கிறேன். வானத்தில் ஒரு மலை காடுடன் தொங்கிக்கிடப்பதுபோலத்தான் தெரியும். சிறகுகளுடன் அவை பறப்பதுபோலவும் இருக்கும். நீங்கள் பினாங்கு பகுதியில் பார்த்திருக்கலாம்

அருண்