அன்புள்ள ஜெ
இன்றைய ஒற்றை அத்தியாயத்தில்
இரு நுட்பமான விசயங்கள் வருகின்றன. அவற்றை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தினால் மட்டுமே
முழுமையான பொருள் கிடைக்குமென்று தோன்றியது.
புற்றிகத்தின்
குடித்தலைவர் சொல்கிறார். அழிவு ஒருகணம் பிந்தித்தான் செல்லமுடியும் .முந்தமுடியாது.
முந்தினால் உலகம் இல்லை.அந்த ஒருகணமே வாழ்க்கை என்பது அதுதான் ருதம்
அசுரர்களைப்பற்றி
கௌமாரன் சொல்கிறான்/ அசுரர்கள் எதிர்நிலையாகத்தான் செயல்பட முடியும் எதிரி இலலமல் இருக்கமுடியாது.
எதிரி இல்லாவிட்டால் அவர்கள் தாங்களும் அழிந்துவிடுவார்கள். ஆனால் தேவர்கள் நேர்நிலையால்
எழமுடியும் என்று
தேவர்களுக்கும்
அசுரர்களுக்கும் இந்த ஒரு துளிவித்தியாசம் மட்டும்தான். இதுதான் ருதம்
சாரங்கன்