ஜெ
விருத்திரன் இருக்கும்
நிலையை வாசிக்கையில் ஒருவகையான நிலைகொள்ளாத தன்மையையே நான் அடைந்தேன். தலைக்குமேல்
வெள்ளம் போனபின்னாடியும் குடித்து விழுந்துகிடக்கிறான். மனசை அசைக்கமுடியவில்லை. அது
ஒரு அசுரகுணம். அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
அதேபோல இன்பங்களில்
மயங்கிக்கிடப்பது தேவகுணம். இரண்டுமே மயக்கம்தான். குடிகேளிக்கை சீட்டு என்று கிடக்கிறார்கள்
சிலர். சிலர் இசை, நாட்டியம், மதம் என்றுகிடக்கிறார்கள். முன்னது விருத்திரன். பின்னது
இந்திரன். இரண்டையும் கடந்துவரவேண்டியிருக்கிறது. ஆனால் அவ்வளவுபெரிய ஒருநகரை எழுப்பி
தேவனையே வென்றவன் அப்படிக்கிடப்பதைப்பாக்க மனசு பதைபதைத்தது.
மொத்தக்கதையுமே
மிகவும் ஃபாண்டஸியும் கற்பனையுமாகத்தான் உள்ளது. ஆனால் உள்ளே இந்த ரியலிஸம் இருந்து
படுத்திவைக்கிறது. ஏனென்றால் விருத்திராசுரனில் என் அப்பாவைத்தான் பார்த்தேன்
முருகேஷ்