சிறுமி ஒருவள், தன் துணிப்பைக்குள் இருந்து, இது இமயம் , இது கங்கை
என பாரதத்தை பரப்பிவைப்பது போல, மூன்றே அத்தியாயங்களில், காமநிறைவை
சொல்லிவிட்டீர்கள்.
நான் , அவள் பெற்ற பிள்ளைகளை திரும்ப கேட்பாள் என்றே நினைத்திருந்தேன்.
கோல்
சுழற்றியவளின் கன்ன சிவப்பும், குனிந்து மறுமொழி சொன்ன அர்ஜுனனின்
குறுநகையும் , பரிவாரங்களுடன் வெளியேறும் இந்திரனும் மனதில்
ஓவியமாகிவிட்டார்கள்.
நன்றி !
பேரன்புடன்,
ராஜா