Thursday, December 15, 2016

விழிகள்




இன்று வாலியும் அர்ச்சுன்னும் உரையாடுவதும் இருவரும் உணரும் விழிகள் அதன் வழியாக வாலி கிருஷ்ணனுக்கு எதிராக அர்ச்சுனனை உசுப்பேற்றும் முயற்சி என அனைத்தும் காவியத்தின் உச்ச பட்ச கற்பனையை குறிக்கின்றன. ஆசிரியரின் புனைவுலக சாதனையின் இன்னொரு மைல்கல்.


அர்ச்சுனன் இந்திரலோகத்திலிருந்து மட்டும் சாபத்தை வாங்கி வருவதை சீரயல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் என்னென்னவாக இருக்கும் என நேற்று யூகித்ததும இன்று யூகிப்பதும் வெவ்வேறாக இருக்கின்றன.


ராமன் தன் வாழ்வில் அறம் பிறழ்ந்து செயல்படுவது வாலிவதத்தின் போதுமட்டும். அந்த தருணத்தின் நோக்கோடே கிருஷ்ணனின் விழிகள் அமைந்திருப்பது என்ற விவரணை, அதை வீழ்ந்த ஒரு இந்திர மைந்தன், வீழ்ந்த இன்னொருவனிடம் சொல்வது ஆகியவை கலந்த இந்த அத்தியாயம்  இந்த காவியத்தின் நுட்பங்களுக்கான ஒரு சோற்றுப்பதமாக உள்ளது


காளிப்பிரசாத்