மாயை விசித்திரமானது
அது அசைந்துக்கொண்டே இருக்கும்போது இல்லாமை இருப்பதுபோன்றும், அசையாதது அசைவதுபோன்றும்,
தந்தை மகன் என்றும் தெரிகிறது.
ஆணவம் மாயை கன்மம்
என்னும் மும்முகன் தனது ஆற்றலால் விரிந்து விரித்திரனாகி இந்திரானாகும்போது நான் என்னும்
நான்காவது முகம் மயக்கத்தில் விழுகின்றது.
நான் என்பது என்ன?
அகங்காரம். தேவர்கள் தோன்றும்போது அது அசுரர்களுக்குள் எழுகிறது. அசுரர்கள் எழும்போது
அது தேவர்களுக்கு எழுகிறது. தேவர்கள் இல்லாதபோது
அசுரர்கள் இடம் இல்லாமல் ஆவது நான் என்னும் அகங்காரம். அசுரர்கள் இல்லாதபோது தேவர்கள்
இடம் இல்லாமல் ஆவது நான் என்னும் அகங்காரம்.
நான் என்னும் அகங்காரம் தேவேந்திரன் ஆனாலும் ஆகாமல் விழுந்தாலும் இல்லாமல் இல்லை
ஆனால் எழாமல் இருக்கிறது. அதாவது மூன்றுமுகம் நான்கு முகமாக ஆகாமல் இருக்கிறது. மாவீரியம்
புற்றுகபுரி எங்கிருந்துவந்தாலும் விரித்திரன் நான் மயங்கி கிடக்கிறது. தேவர் உலகில்
இருந்து கீழே விழும் தேவேந்திரன் இடமும் அது மயங்கிகிடக்கிறது. மயங்கிய நானை தேவேந்திரன்
நாரதர் இடம் கொட்டுவாங்கி எழுப்பிக்கொள்கிறான். விரித்திரன் இன்னும் இன்னும் மதுவென்று
அதை மயக்கடித்துக்கொண்டே இருக்கிறான்.
வருணனுடன் சேர்ந்து அசுரநானோடு வரும் இந்திரன்
முன்பு விரிந்திரேந்திரன் நானை அடைகின்றான்.
நானும் நானும்
சந்தித்து போர்புரியும் இடத்தில் இரண்டும்
ஒன்றில் ஒன்று எனக்கலக்கும்போது ஒன்றிலிருந்து ஒன்று என வெளிப்படுகின்றது. தந்தை என்றும்
மகனென்றும். தந்தையில்லாமல் மகன் இல்லை, மகன் இல்லாமல் தந்தை இல்லை. விதையில்லாமல்
செடியில்லை செடியில்லாமல் விதையில்லை. செடிமுளைத்தபின்பு விதையில்லை என்று ஆகின்றது.
ஆணவம் மாயை கன்மம் மூலம் உயரும் ஒரு சீவன் மயக்கத்தில் விழும்போது
அதில் இருந்த நானும் மயங்கிவிடுகிறது. ஆன்மாவாகிய கௌமாரன் தள்ளிநின்றுவிடுகின்றான்.
ஆனந்தமாகிய இந்திராணி துன்பப்படுகின்றாள். வெளியில் இருந்து வரும் ஒரு எதிர்சக்தி உள்ளுக்குள்
மயங்கி கிடக்கும் நானை எழுப்பி மும்முகத்தோற்றத்தை
மாற்றி நான்முக ஊழகத்தில் உட்காரவைத்துவிடுகிறது. வெளியில் இருந்து வந்ததுபோன்று தோன்றிய நான் தனது
சொருபமான ஆனந்த இந்திராணியை அடைந்துவிடுகிறது.
எம்பெருமான் முருகனை அருள்திரு அருணகிரிநாதசுவாமிகள்.
நாதவிந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொருபா நமோ நம
ஞானபண்டித சாமி நாமோ நம-வெகுகோடி
நாமசம்பு குமார நமோ நம
போக அந்தரிபாலா நாமோ நம
நாக பந்த மயூரா நமோ நம-பரசூரர்
சேத தண்ட விநோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நாமோ நம-கிரிராஜ
தீப மங்கள ஜோதி நாமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நாமோ நம அருள்தாராய் “ என்று துதிக்கிறார்.
நாதமாகிய
ஒலியும் விந்துவாகிய ஒளியும் ஒன்றாக இருத்தான் இருந்தது. ஒளி ஒரு கணம்
முன்னால் வருகின்றது. ஒலி ஒரு கணம் பின்னால் வருகின்றது. மின்னால்
வந்தபின்பு இடிவருவதுபோல். இடியும் மின்னலும் ஒரே இடத்தில் இருந்துதான்
வருகிறது. ஒளி பொருளாகவும், ஒலி கடல் அலையாகவும் எழுகின்றது.
நாரதர்
வந்து
கொட்டிய பிறகு தேவேந்திரன் ஓசை உடைய கடலை நாதத்தை துணையாகக்கொண்டு, உருவம்
உடைய புற்றுகபுரியை ஒளியுலகத்தை நாத கடல்அலைகளால் அழித்து புற்றுகபுரியின்
தலைவனையும் அதே நாதகடல்அலையை புரவியாகக்கொண்டுவந்து வெல்கிறான்.
நாதக்கடலின்
ஆசியோடுதான்
விரித்திரன் புற்றுகபுரியை உண்டாக்கினான், புற்றுகபுரி வெற்று ஆணவமாக
மட்டும் அமையும்போது அதே நாதக்கடல் அலையலையாக வந்து புற்றுகபுரியை
அழிக்கிறது. நீயும் நானும் ஒரு இனம் என்றபோதும் நாதக்கடல் சலனமற்று
இருக்கிறது. நாதக்கடல் ஆற்றலால் அசுரனாக இருந்தாலும் அது ஆணவத்தை மாயை
கன்மத்தை அழிக்கையில் தேவசொருபமாக
நிற்கிறது. நாதக்கடல் ஓசையை மயக்கத்தில் இருக்கும் விரித்திரேந்தின் ஏதோ
சத்தம் என்று எண்ணியே மயங்குகின்றான் தேவகன்னியரும் அவனுக்கு அவ்வாறுதான்
மொழிப்பெயர்க்கின்றார்கள். ஆனால் மயக்கத்தில் இருக்கும் தேவேந்திரனை
சுடுமணிலில் போடும் நாரதரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள அதே
நாதக்கடலுக்குள் தேவேந்திரன் விழுந்து தெளிகின்றான். நாதக்கடல்
மயங்கியவனுக்கு சப்தமாகவும், சுடுப்பட்டவனுக்கு மருந்தாகவும் இருக்கிறது.
விரித்திரன்
எத்தனைதான்
இந்திரனை வெட்டிவீழ்தினாலும் நாதக்கடல் பிரணவக்கடல் இந்திரனை
காப்பாற்றுகின்றது. மயங்கியவன் அலையை எத்தனை வெட்டினாலும் அலைப்புரவி
இறக்காது என்பதை அறியவில்லை. பிரணவக்கடல்
புரவியில் ஏறிவரும் இந்திரன் விரித்திரன் ஆணவத்தை மாயை கன்மத்தை வெட்டி
வீழ்த்தி நான்
என்ற ஒற்றை சிறகோடு தப்பவிடுகிறான். இறுதியில் நான்தான் நீ என்று காட்டி
ஊழகத்தில்
விடுகின்றான்.
தேவேந்திரன் வென்றாலும்
நான் என்னும் அகங்காரத்திற்குள்தான் வாழவேண்டி உள்ளதால் அவனுக்கும் கர்மம் இருக்கிறது
என்று காட்ட நீர்கடன் செய்யவேண்டிய நிலையில் காட்டப்பட்டு உள்ளான்.
மிகவும் அற்புதமான
ஆன்மிக பயணமான படைப்பு விரித்திரன் கதை. ஈடு இணையில்லாத மெய்மையில் சுழன்று பிரபஞ்ச
தரிசனம் செய்கிறது. இந்த கதையில் கடலை தாண்டி இருக்கிறீர்கள் ஜெ.
விரித்திரனின்
மயக்கத்தை நீக்க இந்திராணிப்படும் பாடு எல்லாம் முடிந்து அவள் அதை ஊழ் என்று சொல்லிச்செல்லும்இடத்தில்
கௌமாரன் மயக்கதை அகற்றினான் என்று காட்டும் இடத்தில் உங்கள் உளி பாறையை சிலையாக்கி நடக்கவும் விடுகின்றது.
//அவள் செல்வதை கௌமாரன் நோக்கிநின்றான். அவள் உடலசைவுகள் அனைத்திலும் துயரும் சினமும் நிறைந்திருந்தன. அவள் செல்லும்போது எதிர்த்திசையில் அவள் நிழலொன்று வருவதுபோல் தோன்றியது. அவன் விழியிமைத்து அம்மயக்கை அகற்றினான்.//
விரித்திரன் இந்திரன் என்பதே
ஒரு மயக்குதான். நமக்குள் நாமே இரண்டாக நின்று நடிக்கின்றோம்.
நாம் மற்றவர்களை எப்படி நடத்தவேண்டும்? என்று பகவான் ஸ்ரீரமணரிடம் கேட்டபோது, பகவான் சொன்னப்பதில் “மற்றவர்கள் என்று யாருமில்லை“
.
ராமராஜன் மாணிக்கவேல்.