Thursday, May 3, 2018

திரௌபதி




ஜெ

மகாபாரதத்தின் இடைச்சேர்க்கைகளில் திரௌபதியை மாயாசீதையின் மறுபிறப்பு என்றும் நளாயினியின் மறுபிறப்பு என்றும் சொல்லப்பட்டுள்ளது. வேறுபுராணங்களிலும் உள்ளது. இதையெல்லாம் மையக்கதையில் சேர்க்கமுடியாமல் விட்டுவிடுவீர்கள் என்றுதான் நான் நினைத்தேன். இமைக்கணத்தில் மிக அடிப்படையான கேள்விகளைக் கேட்க அந்தக்கதைகள் பயன்படுவதைக் காணும்போதுதான் இந்த அம்சம் கவனிக்கவே இல்லையே என நினைத்தேன். எந்தெந்த கோணங்களிலெலலம் மகாபாரதத்தை வாசித்திருப்போம். இப்படி ஒரு நுட்பம் கண்ணுக்குப்படவில்லை. திரௌபதியின் பிறப்புடன் காமம் கலந்தே உள்ளது. காமமே அதிகாரமாகவும் அன்பாகவும் அழகுணர்வாகவும் அவளுக்குள் நிறைந்திருக்கிறது. அந்த அழகுக்கு வேதாந்தத்திலே என்ன இடம் என்று அவள் கேட்கிறாள்

சுவாமி