Thursday, February 5, 2015

அனல்மைந்தனின் அன்னை



ஜெ,

நேற்று கொஞ்சம் தாமதமாகத்தான் வாசித்தேன். புலோமையின் கதை பல அதிர்வலைகளை உண்டுபண்ணியது. முக்கியமான செய்தி ஒன்று அதிலே உள்ளது. பிருகுவம்சம்தான் பரசுராமனின் வம்சம் இல்லையா? பிருகுகுலத்தைப்பற்றிய நீண்ட கதை ஒன்று வண்ணக்கடலிலே வரும். முழுக்கமுழுக்க தீ நிறைந்த கதை அது. [சண்முகவேலின் ஓவியங்களும் பிரமாதமாக இருக்கும் அதில்]

அந்தக்கதையிலும் பிறகும் பரசுராமனுக்கு நீங்கள் ஒரு விளக்கம் கொடுப்பீர்கள். பரசுராமன் அன்றைய சத்ரியர்களால் பழிவாங்கப்பட்ட பிராமணன். ஆகவே அவர் சமானமான ஒரு பிராமண -சத்ரிய வம்சத்தை உண்டுபண்ணினார். பிருகு குல [பார்க்கவ] பிராமணர்களும் அக்னிகுல சத்ரியர்களும் அவரால்  உண்டுபண்ணப்பட்டவர்கள். ்ஞானஸ்நானம் கொடுப்பது போல அவர்   வேள்விகள் செய்து பிராமனர்கலையும் சத்ரியர்களையும் உண்டுபண்ணிக்கொண்டே இருந்தார்.

 இந்தியா முழுக்க உருவான புதிய அரசகுலங்கள் பிராமனகுடும்பங்கள் அவ்வாறு உருவானவர்களே. பிராமணர்கள் எண்ணிக்கையில் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக பெருகியதும் அவரால்தான். [அவர் காடுகளை வெட்டி குடியேறிய சாதிகளின் அடையாளம். ஆகவேதான் மழு கையில் வைத்திருக்கிறார் என்றுகூட சொல்லலாம். கோசாம்பி எஃபக்ட்]

இந்தக்கதையிலே உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் அவருடைய மூதாதையான பிருகுவிடம் இருந்து சியவனனையும் அவரது வழித்தோன்றல்களையும் பெற்றவள் அரக்க குலத்தைச்சேர்ந்த புலோமை. அதாவது பரசுராமனின் ரத்தம் அரக்க ரத்தம். அவர் ஏன் மற்ற பிராமணர்களில் இருந்து ஒருபடி கீழாக நினைக்கப்பட்டார் என்பது இதை விளக்குகிறது. அவர் போர்புரியக்கூடிய பிராமணனாக இருந்தா. மற்ற பிராமணர்களை எதிர்த்து புதிய பிராமணர்களை உண்டுபண்ணினார். எல்லாமே சரியாக பொருந்துகிறது.

செம்மணி அருணாசலம்i