Thursday, February 5, 2015

புலோமிகளின் அந்தரங்கம்



ஜெ

புலோமையின் கதை எங்கெங்கோ கொண்டுசென்றது. புலோமை ஒரு அரக்கி என்பதே முக்கியமானது. அதாவது அவள் basic instinct களினால் ஆன பெண். அவள் மனம் முக்கியமானது. அதைப்புரிந்துகொள்ள பலஅடுக்குகளாக எடுத்து ஆராய்ந்துபார்க்கவேண்டியிருக்கிறது. சாதாரணமாக ஒற்றைப்படையாகப்பார்த்தால் தெளிவு வராது என்றுதோன்றியது

புலோமை அவளுக்கு உகந்த கணவனாக பிருகு முனிவரை கண்டு ஏற்றுக்கொள்கிறாள். அவள் தீயானவள். தீ போன்ற ஒருவரைத்தான் அவள் ஏற்க முடியும். அவருடைய குழந்தையைத்தான் பெற்றெடுக்க முடியும். இது அவளுடைய கருப்பைக்கு

ஆனால் அவளுக்கு இன்னொருவனும் வேண்டும். அது அவளுக்குள் உள்ள கள்ளமில்லாத கன்னிப்பெண்ணுக்குரிய காதலன். அவன் அவளைப்போல அரக்கனாகவே இருக்க முடியும். அவனுக்கும் புலோமன் என்றே பெயர் இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. வயிற்றில் குழந்தை இருக்கும்போது அவள் அந்தக்குழந்தையை கனவுகாண்கிறாள். அவனையும் கனவு காண்கிறாள்.

அவன் வந்து அவளைக் கொண்டுசெல்லும்போது அந்தக்குழந்தையைக் கொண்டுபோக முடியவில்லை. அதன் எடை அதிகம். எவ்வளவு நுட்பமான அர்த்தம் இல்லையா?

அப்படியே இன்றைக்கு நிகழக்கூடிய ஒரு கதை. ஒரு இன்றைய சாதாரணமான பெண்ணின் வாழ்க்கையிலும் இந்தக்கதையைப்போட்டுப்பார்க்கலாம்

இதில் அக்னி அந்த ஆழ்மனசில் உள்ள காதலனைத்தான் favour செய்கிறது என்பது மிக ஆச்சரியமானது. அக்னி முனிவரைத்தான் ஆதரிக்கும் என்று நினைப்போம். ஆனால் ஒரு ancient wisdom  புலோமிக்கு புலோமன் தானே சரி என்று முடிவுசெய்திருகிறது

சாமிநாதன்