ஜெ சார்,
வெண்முகில்நகரம் 2 வில் ஒரு காட்சி. புலோமை கர்ப்பம் தரித்திருக்கும்போது அந்தக்குழந்தையை கனவுகாண்கிறாள். கூடவே தன் இளமைப்பருவத்து காதலனையும் கனவுகாண்கிறாள். அவள் அவனை மறந்துவிட்டாள். ஆனால் அப்போது அவளுக்கு ஞபகம் வருகிறது. தாபத்துடன் அவள் அவனை அழைக்கிறாள். அவன் அவள் மனசுக்குள் இருந்து வருவதுபோல் வந்துவிடுகிறான்
தெரிந்து நீங்கள் எழுதினீர்களா இல்லையா என்று தெரியவில்லை. இல்லை மூலக்கதையிலேயே இருக்கிறதா? ஆனால் இது உண்மை. கருவுற்றிருக்கும்போதுதான் இளமைப்பருவமும் முதல்காதலும் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். ஏக்கமும் அழுகையும் எல்லாம் வரும். இது பெண்களுக்குத்தெரியும். பொதுவாக அப்போது மனசே ரொம்ப நெகிழ்ந்த நிலையில் இருக்கும். செத்துப்போவதுபோல தோன்றிக்கொண்டே இருக்கும்
நுட்பமான விஷயம் இது. வாசித்ததும் சிலிர்த்துப்போனேன்[ என்பெயரை போட்டு பிரசுரிக்கவேண்டாம்]
ஜெ
அன்புள்ள ஜெ
அது மூலக்கதையில் இல்லை. தெரிந்து எழுதியதும் அல்ல. கை எழுதியது
ஜெ