Thursday, February 5, 2015

அர்த்தநாரி



“உள்ளத்தில் எப்போதும் நாதமிருக்கிறது இளவரசே” என்றார் மிருஷை. “இளவயதிலேயே அதை நான் உணர்ந்துகொண்டேன். அதை நான் இசை என்றேன். என் குடியினரும் ஊரினரும் பெண்மை என்றனர். இரண்டையும் நான் ஏற்றுக்கொண்டேன். இப்புவியெங்கும் நிறைந்துள்ள அழகென்பது மென்குழைவே. அதையே என் உடலாகவும் அசைவுகளாகவும் கொண்டேன்.”

ஜெ

மிருஷை தன்னுடைய இருபாலின உருமாற்றத்தைப்பற்றிச் சொல்லும் இந்த மிகச்சுருக்கமான வரிகள் வழியாக ஒரு வாழக்கையே சொல்லப்படுகிறது. பழங்காலத்தில் இருபாலினம் என்பது ஓர் அனுக்ரகமாகவே கொள்ளப்பட்டது. அதை இன்றும் வட இந்தியாவிலே பார்க்கலாம். இன்றைக்கும் மகாபாரதம் தான் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை அளிக்கக்கூடிய புராணமாக இருக்கிறது. பலவகையிலும். தாங்கள் தெய்வத்துக்கு உகர்ந்தவர்கள்  என்பதை காட்டுவதற்காகாக அவர்கள் பயன்படுத்தும் புராணம் மகாபாரதத்திலே இர்க்கும்

இருபாலினத்தன்மை என்பது ஒரு அழகு வந்துசேருவது. தாய்மையும் பெண்மையும் இழுக்கு அல்ல. அது ஆணின் ஒரு தகுதி என்றெல்லாம் இது பொருள் படுகிறது. பழங்காலத்தில் விரும்பி இப்படி ஆனவர்களும் உண்டு. அர்த்தநாரீஸ்வர தத்துவத்தையும் இது சொல்லிவிடுகிறது

எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன்