Tuesday, March 17, 2015

அனலுடையாள்




ஒரு சிறு வஞ்சத்திலிருந்து மாபெரும் வஞ்சங்கள் முளைத்தெழுவதை, அவை ஒன்றிலிருந்து ஒன்றென படர்ந்து பெரும் மானுடத்துயரம் நோக்கிக் கொண்டுசெல்வதைச் சித்தரிக்கும் நாவல் இது. மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு ஓர் உச்சம். எரிதழலில் பிறந்த கன்னி அவள் என்கிறார் வியாசர். சிறுமைக்க்காளான துருபதனின் வஞ்சமே திரௌபதியாக முளைத்தது. அது சிறுமைப்படுத்தப்பட்ட துரோணரின் வஞ்சத்தின் விளைவு. வஞ்சம் என்பது ஒரு விதை. காடாகும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டது.

பிரயாகை என்பது நதிச்சந்திப்பு. ஐந்து நதிகள் இணையும் பெருநதியான கங்கைக்கு நிகராக இந்நாவலில் திரௌபதி நிறைந்திருக்கிறாள். பேரழகும் பெருங்கருணையுமாகப் பிறந்த பேரழிவின் தெய்வம் அவள். இது அவளுடைய பிறப்பின் வளர்ச்சியின் கதை. ஐங்குழல்கொற்றவையாக அவள் ஆகி நிற்கும் முழுமையில் முடிவடைகிறது.

பாரதத்தின் நிலங்களினூடாக, இனக்குழுக்களின் கதைகளினூடாக, தேசங்களின் வரலாறுகளினூடாக நுணுக்கமான சித்தரிப்புகள் வழியாக விரிந்து செல்கிறது இப்புனைவு. தகவல்களும் சித்திரங்களும் உணர்ச்சிமோதல்களும் கொண்டு எழுச்சியூட்டும் வாசிப்பை அளிக்கிறது,  மகாபாரதத்திற்கு வெளியே  இந்தியவரலாறோ தத்துவமோ மானுட உணர்ச்சிகளோ ஏதுமில்லை என்பதை மீண்டும் நிறுவுகிறது


பிரயாகை  பின்னட்டை வாசகம்